கட்சிக்கு எதிராக நான் போராட சொன்னால் குற்றமா? பா.ஜனதாவுக்கு குமாரசாமி கேள்வி
அரசுக்கு எதிராக மக்களை போராட எடியூரப்பா தூண்டலாம். நான் ஆட்சிக்கு இடையூறு செய்வதால் பா.ஜனதாவுக்கு எதிராக போராட சொன்னால் குற்றமா? என்று பா.ஜனதாவுக்கு குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சிக்கமகளூரு,
சிருங்கேரி சாரதா மடத்தில் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடத்திவிட்டு வெளியே வந்த முதல்-மந்திரி குமாரசாமியிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகத்தில் 6½ கோடி மக்கள் வசித்து வருகிறார்கள். நமது மாநில மக்களின் நலன் கருதி, சாரதம்மா கோவிலில் யாகம்-பூஜை செய்து வழிபட்டேன். விவசாயிகள் உள்பட பொதுமக்கள் யாருமே கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொள்ளக் கூடாது. மக்களின் நலனுக்காக நான் சாரதம்மனை வேண்டியுள்ளேன். கர்நாடகத்தில் தேசியமயமாக்கப்பட்ட மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஹாசனில் நாளை (அதாவது இன்று) ஜனதாதளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது. இதில் நானும் கலந்துகொள்கிறேன். எங்கள் கட்சியை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்கள் மும்பை சென்றுவிட்டதாகவும் சிலர் கூறுகிறார்கள். அந்த 2 எம்.எல்.ஏ.க்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்வார்கள். எங்கள் கட்சி தலைமை மீது யாரும் அதிருப்தியில் இல்லை. அனைத்து எம்.எல்.ஏ.க்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்வார்கள்.
கர்நாடகத்தில் நல்லாட்சி நடத்தி வரும் வேளையில், பா.ஜனதாவினர் இடையூறு செய்து வருகிறார்கள். எனவே பொதுமக்கள் இதை தட்டிக்கேட்க வீதியில் இறங்கி போராட வேண்டும் என்று நான் சொன்னேன். இதற்காக பா.ஜனதாவினர் எதிர்ப்பு தெரிவித்து என்னை கண்டித்து போராட்டம் நடத்துகிறார்கள். எடியூரப்பா, கூட்டணி ஆட்சிக்கு எதிராக மக்களை போராட தூண்டுகிறார். அது குற்றமில்லையா?. நான் சொன்னால் மட்டும் குற்றமா?.
எடியூரப்பா போல் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் வேலையை நான் செய்யவில்லை. கர்நாடகத்தில் நிலவும் தற்போதைய அரசியல் நிலவரத்தை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். இதற்கு மக்களே விரைவில் நல்ல தீர்ப்பு கூறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது
இவ்வாறு அவர் கூறினார்.
சாரதா மடத்தில் யாகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்த வேளையில் முதல்-மந்திரி குமாரசாமிக்கு அடிக்கடி செல்போன் அழைப்பு வந்தபடி இருந்தது. மேலும் அவரது முகம் இறுக்கத்துடன் காட்சி அளித்தது. அத்துடன் அவர் பரபரப்பாகவே காணப்பட்டார். இதுபற்றி அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பனர்.
அதற்கு அவர் பதில் அளித்து கூறுகையில், ‘கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி தொடர்ந்து நடைபெறும். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். மக்களின் நலனுக்காக தான் யாகம்-பூஜை நடத்தினேன். ஆட்சியை தக்கவைக்க பூஜை நடத்தவில்லை‘ என்றார்.

Related Tags :
Next Story