பல் துலக்க பூசணி பிரஷ்
பல் துலக்குவதற்கு நம் முன்னோர்கள்ஆலங்குச்சி, வேப்பங்குச்சிகளை பயன்படுத்தி வந்தார்கள். நவீன கால மாற்றம் பிளாஸ்டிக் பிரஷ்களை புழக்கத்திற்கு கொண்டுவந்துவிட்டது.
பல் துலக்குவதற்கு நம் முன்னோர்கள்ஆலங்குச்சி, வேப்பங்குச்சிகளை பயன்படுத்தி வந்தார்கள். நவீன கால மாற்றம் பிளாஸ்டிக் பிரஷ்களை புழக்கத்திற்கு கொண்டுவந்துவிட்டது. அவை சுற்றுப்புற சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறிக்கொண்டிருக்கின்றன. உலகம் முழுவதும் மாதம் தோறும் 15 கோடி பிளாஸ்டிக் டூத் பிரஷ்கள் பயன்பாட்டுக்கு பிறகு குப்பையில் வீசப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பிளாஸ்டிக் பைகளை விட இவை பருமனானவை என்பதால் பாதிப்புகளும் அதிகமாக இருக்கிறது. இவைகள் மக்குவதற்கும் சாத்தியமில்லாத நிலையில் இருக்கின்றன.
அதனால் சுற்றுச்சூழலுக்கு பங்கம் விளைவிக்காத பிரஷ்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. முன்னோர்கள் கையாண்ட பல் துலக்கும் யுக்தியையே நிறைய பேர் மீண்டும் பின்பற்ற தொடங்கி இருக்கிறார்கள். இந்த நிலையில்ஆந்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் தேஜா, பூசணி செடியின் தண்டு பகுதியில் பிரஷ் உருவாக்கி இருக்கிறார்.
இவர் விஜயநகரம் மாவட்டத்திலுள்ள தர்மாவரம் என்ற விவசாய கிராமத்தை சேர்ந்தவர். அங்கு பூசணி பயிர் சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. பூசணி அறுவடைக்கு பிறகு வீணாகி போகும் செடியின் தண்டு பகுதிகளை சேகரித்து உலர வைத்து அவைகளை பிரஷ் தயாரிப்புக்கான மூலப்பொருளாக மாற்றுகிறார். அவற்றுடன் பனை மரத்தின் நார்களையும் சேர்த்து இதனை உருவாக்குகிறார். அவை பல் துலக்குவதற்கு ஏற்ப மென்மையான இழைகளாக அமைந்திருக்கின்றன. ஐதராபாத்தில் உள்ள கிராமப்புற மேம்பாட்டு மற்றும் பஞ்சாயத்து ராஜ் தேசிய நிறுவனத்தில் தனது படைப்பை காட்சிப்படுத்தி இருக்கிறார். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற இவருடைய பிரஷ் தயாரிப்புக்கு பலதரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் கிடைத்திருக்கிறது. இதில் ஒரு பிரஷை பயன்படுத்தி 10 முறை பல் துலக்கலாம்.
‘‘பிளாஸ்டிக் பிரஷ்கள், உபயோகிப்பவர்களுக்கும், மண்ணுக்கும் கேடு செய்கிறது. நான் வடிவமைத்திருக்கும் இயற்கை பிரஷ் எளிதில் மக்கும் தன்மை கொண்டவை. அவை மண்ணுக்கும் வளம் சேர்க்கும். பிளாஸ்டிக் பிரஷ் உபயோகிப்பதால் அதிலிருக்கும் நஞ்சுப்பொருள் மறைமுகமாக நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது. இந்த பிரஷ்கள் பற்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை. பூசணி தண்டுகளை பிரஷ் செய்ய பயன்படுத்துவதால் அது விவசாயி களுக்கும் கூடுதல் வருமானம் ஈட்டிக்கொடுக்கும்’’ என்கிறார்.
Related Tags :
Next Story