தஞ்சையில் சிலம்பாட்ட போட்டி 3 மாவட்டங்களை சேர்ந்த 150 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு


தஞ்சையில் சிலம்பாட்ட போட்டி 3 மாவட்டங்களை சேர்ந்த 150 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 24 Sept 2018 4:00 AM IST (Updated: 23 Sept 2018 10:48 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் சிலம்பாட்ட போட்டி நடந்தது. இதில் 3 மாவட்டங்களை சேர்ந்த 150 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட சிலம்பாட்டக் கழகம் சார்பில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட வீரர், வீராங்கனைகளுக்கான சிலம்பாட்ட போட்டி கரந்தை தமிழ்ச்சங்கத்தில் நேற்று நடந்தது. தஞ்சை மாவட்ட சிலம்பாட்டக்கழக பொருளாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். துணைத்தலைவர் ராதிகாமைக்கேல் தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார்.

தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் இருந்து 150–க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டிகள் ஜூனியர், சப்ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் 27 வகையான போட்டிகள் நடந்தது. இதில் 11 வயது முதல் 35 வயது வரையிலான வீரர்கள் கலந்து கொண்டனர்.


தமிழ்நாடு சிலம்பாட்டக்கழக போட்டி இயக்குனர் விக்டர்குழந்தைராஜ், கரந்தை உமாமகேஸ்வரனார் கலைக்கல்லு£ரி ஆங்கிலத்துறை தலைவர் சண்முகம், தஞ்சை மாவட்ட சிலம்பாட்டக்கழக பொதுச்செயலாளர் ஜலேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாலையில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Next Story