மாவட்ட செய்திகள்

குழாய்களுக்குள் வளரும் கருவேல மர வேர்கள் குடிநீர் தடைபடுவதால் பொதுமக்கள் அவதி + "||" + Tree roots growing in pipes Drinking water Civilians are suffering

குழாய்களுக்குள் வளரும் கருவேல மர வேர்கள் குடிநீர் தடைபடுவதால் பொதுமக்கள் அவதி

குழாய்களுக்குள் வளரும் கருவேல மர வேர்கள் குடிநீர் தடைபடுவதால் பொதுமக்கள் அவதி
குடிநீர் குழாய்களுக்குள் புகுந்து வளரும் காட்டுகருவேல மர வேர்களால் காவிரி குடிநீர் விநியோகம் தடைபடுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக திருச்சி முத்தரசநல்லூரில் இருந்து காவிரி கூட்டுக்குடிநீர் குழாய்கள் மூலம் கொண்டுவரப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு வினியோகம் செய்யப்படும் தண்ணீர் அவ்வப்போது ஆங்காங்கே தடைபட்டு குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுகிறது. இதற்கான காரணம் குறித்து பார்க்கும்போது பூமிக்குள் புதைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களின் இணைப்புகளில் காட்டு கருவேல மர வேர்கள் உட்புகுந்து அதிவேகமாக வளர்ந்து குழாய் முழுவதையும் அடைத்துள்ளது கண்டறியப்பட்டது.

இவ்வாறு மாவட்டம் முழுவதும் காட்டுகருவேல மர வேர்கள் உட்புகுந்துவளர்ந்து குழாய்கள் அடைபட்டு தண்ணீர் வினியோகம் தடைபட்டு உள்ளது. இதனால் தண்ணீர் கிடைக்காமல் அந்தந்த பகுதி பொதுமக்கள் சொல்ல முடியாத அவதி அடைந்து வருகின்றனர்.

மாவட்டத்தில் காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி, நிலத்தடி நீர் ஆதாரத்தை ஈர்த்து வறட்சி பகுதியாக்குவதோடு, கால்நடைகளுக்கும், மனிதர்களுக்கும் நாளுக்கு நாள் பாதிப்பை ஏற்படுத்திவரும் காட்டுகருவேல மர வேர்கள் தற்போது காவிரி குடிநீர் குழாயிலும் உட்புகுந்து தண்ணீர் வினியோகத்தை தடுத்து வருவது வேதனை அளிப்பதாக உள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வேர்கள் உட்புகாதவாறு அதற்கேற்ற குழாய்களை பொருத்தி வீண் செலவுகளை தவிர்ப்பதோடு, மக்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் தடைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது: மல்லிப்பட்டினம் மீன்பிடிதுறைமுகம் வெறிச்சோடியது
மீன்பிடி தடைக்காலம் தொடங்கி உள்ளதால் மல்லிப்பட்டினம் மீன்பிடிதுறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
2. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவம் பாதுகாப்பு; வாக்குப்பதிவை முன்னிட்டு புதுச்சேரியில் 144 தடை, உடனடியாக அமலுக்கு வந்தது
புதுவையில் வாக்குப்பதிவினை அமைதியாக நடத்தும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உடனே இது அமலுக்கு வந்துள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினரின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
3. அம்மாபேட்டை அருகே குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
அம்மாபேட்டை அருகே குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
4. ஈரோடு ஆர்.என்.புதூரில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம் அடிப்படை வசதி கேட்டு நடந்தது
ஈரோடு ஆர்.என்.புதூரில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. ராமேசுவரத்தில் மீன்பிடி தடை காலம் தொடங்கியது விசைப்படகுகள் நிறுத்தி வைப்பு
61 நாட்கள் மீன்பிடி தடை காலம் தொடங்கியதால் ராமேசுவரம் உள்பட மாவட்டம் முழுவதும் 2000–த்திற்கும் மேற்பட்ட விசைப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.