நர்சிங் கல்லூரி பேராசிரியையிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு


நர்சிங் கல்லூரி பேராசிரியையிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 24 Sept 2018 3:30 AM IST (Updated: 24 Sept 2018 1:21 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் அருகே நர்சிங் கல்லூரி பேராசிரியையிடம் 4 பவுன் சங்கிலியை பறித்து சென்ற ‘ஹெல்மெட்’ கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வேலூர், 


வேலூரை அடுத்த அரியூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் துரைக்குமார். இவருடைய மனைவி சசிரேகா (வயது 30), தனியார் நர்சிங் கல்லூரி பேராசிரியை. இவர் நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலையில் மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டார். அரியூரில் உள்ள புதுமை நகர் அருகே சசிரேகா சென்றபோது எதிரே ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் ‘ஹெல்மெட்’ அணிந்தபடி வந்தனர். ‘ஹெல்மெட்’ அணிந்த மர்ம நபர்கள் சசிரேகாவின் மொபட் மீது மோதுவது போன்று வேகமாக வந்துள்ளனர்.

அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மொபட்டை மெதுவாக ஓட்டியுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த ‘ஹெல்மெட்’ கொள்ளையன் ஒருவர் சசிரேகாவின் கழுத்தில் கிடந்த 4 பவுன் சங்கிலியை பறித்தான்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சசிரேகா திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். இவரின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அங்கு விரைந்து வந்து ‘ஹெல்மெட்’ கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று தப்பிவிட்டனர்.
இதுகுறித்து சசிரேகா அரியூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பவுன் சங்கிலியை பறித்து சென்ற ‘ஹெல்மெட்’ கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

வேலூர் கலெக்டர் அலுவலக மேம்பாலத்தில் கடந்த 19-ந் தேதி இரவு காட்பாடி காங்கேயநல்லூரை சேர்ந்த துணி வியாபாரி மனைவியின் 3 பவுன் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த ‘ஹெல்மெட்’ கொள்ளையர்கள் பறித்து சென்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அரியூரில் நர்சிங் கல்லூரி பேராசிரியையிடம் 4 பவுன் சங்கிலியை ‘ஹெல்மெட்’ கொள்ளையர்கள் பறித்து சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story