திருவாரூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


திருவாரூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Sept 2018 4:15 AM IST (Updated: 24 Sept 2018 1:45 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

நாகை மாவட்டம் திருக்கடையூருக்கு வந்த பா.ஜனதா கட்சியின் மாநில செயலாளர் எச்.ராஜாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்தும், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவாக முகநூலில் பதிவிட்ட எஸ்.வி.சேகரையும் கைது செய்ய கோரியும் திருவாரூர் பஸ் நிலையம் அருகில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய, நகர குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் பிரசாத் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கோசிமணி பேசினார்.

இதில் ஒன்றிய தலைவர் கவிநிலவன், செயலாளர் சுந்தரய்யா, பொருளாளர் அருள்மல்லிராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது மாநில அரசின் பாரபட்ச நடவடிக்கையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

Next Story