மாவட்ட செய்திகள்

திருவாரூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் + "||" + The Democracy Youth Association of India demonstrated in Tiruvarur

திருவாரூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருவாரூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,

நாகை மாவட்டம் திருக்கடையூருக்கு வந்த பா.ஜனதா கட்சியின் மாநில செயலாளர் எச்.ராஜாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்தும், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவாக முகநூலில் பதிவிட்ட எஸ்.வி.சேகரையும் கைது செய்ய கோரியும் திருவாரூர் பஸ் நிலையம் அருகில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய, நகர குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் பிரசாத் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கோசிமணி பேசினார்.


இதில் ஒன்றிய தலைவர் கவிநிலவன், செயலாளர் சுந்தரய்யா, பொருளாளர் அருள்மல்லிராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது மாநில அரசின் பாரபட்ச நடவடிக்கையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. 


தொடர்புடைய செய்திகள்

1. பெரம்பலூரில் சர்க்கரை ஆலை பேரவை கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூரில் சர்க்கரை ஆலை பேரவை கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. அறந்தாங்கி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
அறந்தாங்கி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. காவிரியில் 25 ஆயிரம் கனஅடி நீர் திறக்கக்கோரி கருப்புக்கொடியுடன் வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஏரகரம் கிராமத்தில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் விவசாயிகள் வயலில் கருப்புக்கொடியுடன் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ரெயில் நிலையம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ஜங்ஷன் ரெயில்வே கோட்ட அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
5. 2-வது நாளாக கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்
அரியலூர் கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தினர் 2-வது நாளாக அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை