வளர் இளம்பெண்கள், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம் கலெக்டர் பங்கேற்பு
கங்கலேரி கிராமத்தில் வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு முகாமில் கலெக்டர் பிரபாகர் கலந்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ஒன்றியம் கங்கலேரி கிராமத்தில் போஷான் அபியான் திட்டத்தின் கீழ் தேசிய ஊட்டச்சத்து வாரம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், அங்கன்வாடி குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு முகாம் கலெக்டர் டாக்டர் எஸ்.பிரபாகர் தலைமையில் நடந்தது.
நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-
மத்திய மாநில அரசுகள், போஷான் அபியான் திட்டத்தின் கீழ் தேசிய ஊட்டச்சத்து வாரம் கடைபிடிப்பதை முன்னிட்டு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கான்வாடி மையத்தில், குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் வளர் இளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு செப்டம்பர் 1-ந் தேதி முதல் அனைத்து அங்கன்வாடி மையங்களில் நடைபெற்று வருகிறது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் வளர் இளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து குறித்து எடுத்துரைக்கப்படுகிறது.
கர்ப்பிணிகளுக்கு நாளொன்றுக்கு 220 கிராம் ஊட்டச்சத்து மாவு 6 மாதங்கள் அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஊட்டச்சத்து குறித்தும் எடை அதிகரிக்கப்படுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மகப்பேறு நாட்கள் வரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கிராம செவிலியர்கள் கர்ப்பிணிகளை அவ்வப்போது மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு தடுப்பூசி போடுதல், சத்து மாத்திரைகள் வழங்கி வருகிறார்கள். குழந்தை பிறந்தவுடன் தாய்மார்கள் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு 6 மாதம் வரை தண்ணீர் கொடுக்க கூடாது.
எனவே, கர்ப்பிணிகள், குழந்தைகள், வளர்இளம்பெண்களுக்கு சத்தான உணவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்கள் நல்ல ஆரோக்கியமான நல்வாழ்வு பெற இதுபோன்ற விழிப்புணர்வு முகாம்களை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து கலெக்டர் பிரபாகர், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகளை வழங்கி குழந்தைகளின் எடை மற்றும் உயரம், கைகளை சுத்தமாக கழுவுதல் குறித்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் சுசீலாராணி, உதவி திட்ட அலுவலர் மாலா, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் அன்புகுளோரியா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சரளா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா, பிரசன்னகுமார், தாசில்தார் சேகர் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story