பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தெருமுனை பிரசாரம்
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி நேற்று கோவில்பட்டி, கழுகுமலை ஆகிய ஊர்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் தெருமுனை பிரசாரம் நடந்தது.
கோவில்பட்டி,
கோவில்பட்டி நகரசபை அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், அவற்றின் விலைகளை குறைக்க வலியுறுத்தியும் தெருமுனை பிரசாரம் தொடங்கியது.
பிரசாரத்தை முன்னாள் கவுன்சிலர் சீனிவாசகம் தொடங்கி வைத்தார். கோவில்பட்டி கடலையூர் ரோடு, வள்ளுவர் ரோடு, புதுக்கிராமம் ஆகிய இடங்களில் பிரசாரம் நடந்தது. நகர செயலாளர் முருகன், மாவட்ட குழு உறுப்பினர்கள் விஜயலட்மி, நகர குழு உறுப்பினர்கள் சர்க்கரையப்பன், முருகன், தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கழுகுமலையில் காந்தி மைதானத்தில் மார்க்சிஸ்ட் கட்சி, கருத்துரிமை பாதுகாப்பு இயக்கம் ஆகியோர் சார்பில், தெருமுனை பிரசார ம் நடைபெற்றது. மாரியப்பன் தலைமை தாங்கினார். இதில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய மாநில அரசுகள் குறைக்க வலியுறுத்தப்பட்டது.
மேலும், கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் வளாகத்தில் அமைந்துள்ள தெப்பகுளத்திற்கு தண்ணீர் வரக்கூடிய காட்டு மலையில் இருந்து வரக்கூடிய ஓடை மற்றும் வல்லாரை வென்றான் கண்மாயில் இருந்து வரக்கூடிய ஓடைகளை சுத்தம் செய்ய வேண்டும், கழுகுமலை செந்தூர் நகரில் அமைந்துள்ள மயானத்தை பராமரிப்பு செய்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி கூறப்பட்டது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரவீந்திரன், சுப்பையா, கயத்தாறு ஒன்றிய செயலாளர் சாலமன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story