மனைவி குடும்பம் நடத்த வராததால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை


மனைவி குடும்பம் நடத்த வராததால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
x
தினத்தந்தி 24 Sept 2018 3:15 AM IST (Updated: 24 Sept 2018 6:15 AM IST)
t-max-icont-min-icon

வீரவநல்லூர் அருகே மனைவி குடும்பம் நடத்த வராததால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேரன்மாதேவி, 


நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள கூனியூரை சேர்ந்தவர் பிரசன்னா (வயது 42). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி மேரிராணி (35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் தற்போது வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளாங்குழியில் வசித்து வருகிறார்கள். பிரசன்னாவுக்கு மதுகுடிக்கும் பழக்கம் உண்டாம். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மேரிராணி கோபித்துக் கொண்டு தனது பெரியம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் மேரிராணியை குடும்பம் நடத்த வருமாறு பிரசன்னா அழைத்துள்ளார். ஆனால் அவர் வரமருத்துவிட்டார்.

இதனால் மனமுடைந்த பிரசன்னா வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரசன்னா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story