வேலைவாய்ப்பு செய்திகள்: அழைப்பு உங்களுக்குத்தான்


வேலைவாய்ப்பு செய்திகள்: அழைப்பு உங்களுக்குத்தான்
x
தினத்தந்தி 24 Sep 2018 3:45 AM GMT (Updated: 23 Sep 2018 11:55 PM GMT)

சென்னை பெட்ரோலியம் கழக நிறுவனத்தில் என்ஜினீயர், எச்.ஆர்.ஐ.டி., சேப்டி ஆபீசர் போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

சென்னை பெட்ரோலியம்

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கீழ் செயல்படும் சென்னை பெட்ரோலியம் கழக நிறுவனம் (சி.பி.சி.எல்.) நிறுவனம் கடந்த ஆண்டில் 44 ஆயிரத்து 125 கோடி ரூபாய் விற்று முதல் ஈட்டி, 913 கோடி லாபம் சம்பாதித்து உள்ளது. தற்போது இந்த நிறுவனத்தில் என்ஜினீயர், எச்.ஆர்.ஐ.டி., சேப்டி ஆபீசர் போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 42 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், மெட்டலர்ஜி, ஐ.டி. என்ஜினீயரிங் படித்தவர்கள் மற்றும் எச்.ஆர், இதர பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. விருப்பமுள்ளவர்கள் இது பற்றிய விரிவான விவரங்களை www.cpcl.co.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். 8-10-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

ஐ.ஐ.டி.

டெல்லியில் உள்ள ஐ.ஐ.டி. தொழில்நுட்ப கல்வி மையத்தில் திட்ட ஆராய்ச்சியாளர், திட்ட உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு 11 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பி.இ., பி.டெக், எம்.டெக், பிஎச்.டி. படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. 1-10-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை http://ird.iitd.ac.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

டி.எச்.டி.சி.

மத்திய அரசு உத்தரபிரதேச நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தும் ஒரு மத்திய நீர்மின் நிறுவனம் டெக்ரி ஹைட்ரோபவர் காம்பளக்ஸ் நிறுவனமாகும். தற்போது இந்த மின் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப்பணிக்கு 100 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. எலக்ட்ரீசியன், பிட்டர், எலக்ட்ரானிக்ஸ், வயர்மேன், வெல்டர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், மெக்கானிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணிகள் உள்ளன. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சிக்குப் பின்பு குறிப்பிட்ட பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் www.apprenticeshipindia.org என்ற இணையதளத்தில் தங்கள் பெயரை பதிவு செய்துவிட்டு பின்னர் www.thdc.co.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பம், டெக்ரி நீர்மின் நிறுவன முகவரிக்கு 9-10-2018-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களையும் மேற்குறிப்பிட்டுள்ள இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

என்.ஐ.டி.

தேசிய தொழில்நுட்ப கல்வி மையமான என்.ஐ.டி. கல்வி மையத்தின் இமாசலபிரதேச மாநிலம் ஹாமிர்பூர் கிளையில், உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் பணிகளுக்கு 96 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். தொழில்நுட்ப கல்வியில் முதுநிலை பட்டம் மற்றும் ஆராய்ச்சி பட்டம் பெற்றவர்களுக்கு பணிகள் உள்ளன. இது பற்றிய விவரங்களை www.nith.ac.in என்ற இணைய தளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 30-9-2018-ந் தேதியாகும்.

குழந்தைகள் மேம்பாட்டு மையம்

மக்கள் கூட்டுறவு மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு தேசிய மையம் (NIPCCD) இளநிலை இயக்குனர், மண்டல இயக்குனர், டெபுடி டைரக்டர், உதவி இயக்குனர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 36 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 30 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணி உள்ளது. பணி சார்ந்த முதுநிலை படிப்பும், முதுநிலை டிப்ளமோ படிப்பு, ஆராய்ச்சி படிப்பு படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை, ரூ.250 கட்டண டி.டி. உடன் இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பம் அறிவிப்பில் இருந்து 30 நாட்களுக்குள் சென்றடைய வேண்டும். இதற்கான அறிவிப்பு 8-9-2018 அன்று வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இது பற்றிய விவரங்களை http://nipccd.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். 

Next Story