தொழிலதிபர் வீட்டில் நகை திருடிய 2 பேர் கைது


தொழிலதிபர் வீட்டில் நகை திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 24 Sept 2018 3:30 AM IST (Updated: 24 Sept 2018 5:33 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் தொழிலதிபர் வீட்டில் நகை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி,

தேனி கோட்டைக்களம் நேருஜி தெருவை சேர்ந்தவர் சுப்புரத்தினம் (வயது73). தொழிலதிபரான இவர் கடந்த ஜூலை மாதம் தனது வீட்டை பூட்டிவிட்டு சேலத்தில் நடந்த உறவினர் திருமணத்துக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த சுமார் 66 பவுன் தங்க நகைகளை திருடி சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து சுப்புரத்தினம் கொடுத்த புகாரின்பேரில் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருட்டு வழக்கில் தொடர்புடைய மர்ம நபர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் திருட்டு வழக்கில் தொடர்புடைய தேனி அருகே உள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்த கிரி (46), தேனி நியூ ஸ்ரீராம் நகரை சேர்ந்த வெங்கடேஷ் (38) ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story