துணை ராணுவ படைகளில் வேலைவாய்ப்பு


துணை ராணுவ படைகளில் வேலைவாய்ப்பு
x
தினத்தந்தி 24 Sept 2018 10:00 AM IST (Updated: 24 Sept 2018 5:37 AM IST)
t-max-icont-min-icon

துணை ராணுவ படைகளில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:-

துணை ராணுவ படைப்பிரிவுகளில் ஒன்று பார்டர் செக்யூரிட்டி போர்ஸ் (பி.எஸ்.எப்.), எல்லை காவல் படையான இந்த துணை ராணுவ பிரிவில் தற்போது சப்-இன்ஸ்பெக்டர் (குரூப்-பி) பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 103 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு சிவில் என்ஜினீயரிங் டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. தகுதியானவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி, தேவையான சான்றுகள் இணைத்து அனுப்ப வேண்டும். இதற்கான அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும். அதன்படி 1-10-2018-ந் தேதி விண்ணப்பம் சென்றடைய கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை http://bsf.nic.in/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

திபெத்திய எல்லைப் படை

மற்றொரு துணை ராணுவ படையான இந்திய திபெத்திய எல்லைக் காவல் படையில் (ஐ.டி.பீ.பி.) ெஹட்கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 73 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவை கற்பித்தல் மற்றும் மன அழுத்த கவுன்சிலிங் பிரிவு பணிகளாகும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும், உளவியல் பட்டப்படிப்பு படித்தவர்களாகவும் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இன்று (24-ந்தேதி) முதல் 23-10-2018-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரங்களை www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

சிறப்பு மருத்துவர் பணி

மற்றொரு அறிவிப்பின் படி இதே படைப்பிரிவில் சிறப்பு டாக்டர், மருத்துவ அதிகாரி பணிகளுக்கு 42 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். முதுநிலை மருத்துவ படிப்புகள், ஆராய்ச்சி பட்டம் பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். நேர்காணல் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 29-10-2018-ந் தேதி நேர்காணல் நடக்கிறது.

விருப்பமுள்ளவர்கள் விரிவான விவரங்களை இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு, தேவையான சான்றுகளுடன் நேர்காணலில் பங்கேற்கலாம். இது பற்றிய விவரங்களை www.itbp.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.


Next Story