மாவட்ட செய்திகள்

பட்டாசு தொழிலாளர்களுக்கு போனசை உயர்த்தி வழங்க கோரி ஆர்ப்பாட்டம் + "||" + Demonstration to demand bonus raising of fireworks workers

பட்டாசு தொழிலாளர்களுக்கு போனசை உயர்த்தி வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

பட்டாசு தொழிலாளர்களுக்கு போனசை உயர்த்தி வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
விருதுநகர் மாவட்ட பட்டாசு –தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி சிவகாசியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகாசி,

விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 850–க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் உள்ளன. இங்கு சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாக பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் போனஸ் தொகையை 50 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும், விலைவாசி உயர்வை தொடர்ந்து கூலியை உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட பட்டாசு –தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சிவகாசியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பி.என். தேவா, மாவட்ட பொருளாளர் கண்ணன், மாவட்ட துணைத்தலைவர் லாசர், துணை செயலாளர் பிச்சைக்கனி, நகர செயலாளர் முருகன், சுரேஷ்குமார், செல்லச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. சங்குமால் கடற்கரையில் பூங்கா அமைக்க எதிர்ப்பு கடலில் இறங்கி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
ராமேசுவரம் சங்குமல் கடற்கரையில் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. நாமக்கல்லில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவில் தங்கி உள்ளவர்களை பார்ப்பதற்கு இரவு நேரங்களில் வெளி ஆட்கள் யாரையும் அனுமதிப்பதில்லை.
4. டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடாவிட்டால் நாடாளுமன்ற தேர்தல் அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் பொதுமக்கள் எச்சரிக்கை
டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடாவிட்டால் நாடாளுமன்ற தேர்தல் அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்று பொதுமக்கள் கூறினர்.
5. சிக்கல் கிராமத்தில் குடிநீர் வினியோகம் செய்யாததால் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
குடிநீர் வினியோகம் செய்யக்கோரி சிக்கல் கிராமத்தில் பொதுமக்கள் காலி குடங்களுடன் நடு வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.