அருப்புக்கோட்டையில் வீடு, குடோனில் பதுக்கிய ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; 5 பேர் கைது


அருப்புக்கோட்டையில் வீடு, குடோனில் பதுக்கிய ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; 5 பேர் கைது
x
தினத்தந்தி 25 Sept 2018 4:00 AM IST (Updated: 24 Sept 2018 8:45 PM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டையில் வீடு மற்றும் குடோன்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் குட்காவை சிலர் பதுக்கி வைத்து விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் நேற்று அதிரடி சோதனை நடந்தது.

 சண்முகவேலன் தெருவை மளிகை கடை வியாபாரிகளான முத்து முருகன்(வயது31), நவநீதன் (31) ஆகியோருக்கு சொந்தமான குடோனில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தார்கள்.

 இதேபோல நெசவாளர்காலனியில் அழகர்சாமி(32) தேவா டெக்ஸ் காலனியில் சுந்தரம்(42) ஆகியோரது வீடுகளில் இருந்தும் குட்கா, புகையிலை உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.


Next Story