பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதிநேர சிறப்பாசிரியர்கள் போராட்டம்
பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை,
சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அனைவருக்கும் கல்வி திட்ட மாநில இயக்குனர் அலுவலகம் எதிரே அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் நேற்று தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாநில தலைவர் கு.சேசு ராஜா தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ராஜா தேவகாந்த் முன்னிலை வகித்தார்.
ராஜா தேவகாந்த் கூறும்போது, “2012-ம் ஆண்டு 16,549 பேர் பகுதி நேர சிறப்பாசிரியர்களாக நியமிக்கப்பட்டோம். தற்போது மாத சம்பளமாக ரூ.7,700 பெற்று வருகிறோம். வாழ்வாதாரம் கருதி எங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். எங்களுக்கும் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தவேண்டும். அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரியை சந்தித்து கோரிக்கையை தெரிவித்தபோது, அவரது பதில் எங்களுக்கு திருப்திகரமாக இல்லை. எங்கள் கோரிக்கை நிறைவேறும்வரை போராடுவோம்” என்றார்.
Related Tags :
Next Story