இரட்டை கொலை வழக்கில் கணவன்-மனைவிக்கு தலா 10 ஆண்டு சிறை நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு
இரட்டை கொலை வழக்கில் கணவன்-மனைவிக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் ஆண்டிப்பட்டிபுதூர் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் அண்ணாத்துரை (வயது 35). லாரி டிரைவர். இவரது நண்பர் ரவி (40). கட்டிட மேஸ்திரி.
அண்ணாத்துரைக்கும், அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த பழனிசாமி (50) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ந் தேதி இரவு அண்ணாத்துரை, ரவி ஆகிய இருவரும் பழனிசாமியிடம் தகராறு செய்தனர். இந்த தகராறு முற்றியதில் பழனிசாமி, அவரது மனைவி சரசு (45) உள்ளிட்டோர் அண்ணாத்துரை மற்றும் ரவி ஆகிய இருவரையும் கல்லால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக அப்போதைய கீரம்பூர் கிராம நிர்வாக அலுவலர் மகேஸ்வரி பரமத்தி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிசாமி, அவரது மனைவி சரசு, மகன்கள் விக்கிரஆதித்தன் (28), விமல்ஆதித்தன் (25) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு நாமக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட பழனிசாமி, அவரது மனைவி சரசு ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தனசேகரன் தீர்ப்பு கூறினார்.
விக்கிரஆதித்தன், விமல் ஆதித்தன் ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும் அவர்கள் ஏற்கனவே சிறையில் இருந்த காலத்தை கருத்தில் கொண்டு விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பழனிசாமி கோவை சிறைக்கும், சரசு வேலூர் சிறைக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டனர்.

Related Tags :
Next Story