இந்திய ஆட்சி பணியில் சேர்வதற்கு மீனவ சமுதாய பட்டதாரிகளுக்கு சிறப்பு பயிற்சி


இந்திய ஆட்சி பணியில் சேர்வதற்கு மீனவ சமுதாய பட்டதாரிகளுக்கு சிறப்பு பயிற்சி
x
தினத்தந்தி 25 Sept 2018 3:30 AM IST (Updated: 25 Sept 2018 2:23 AM IST)
t-max-icont-min-icon

இந்திய ஆட்சி பணியில் சேர்வதற்கான போட்டி தேர்வு எழுத மீனவ சமுதாய பட்டதாரிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல்லை, 


மீன்வளத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் இணைந்து ஆண்டுதோறும் மீனவ கூட்டுறவு சங்க கடல் மற்றும் உள்நாட்டு மீனவ சமுதாயத்தை சேர்ந்த படித்த 20 பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து தனிக்குழுவாக அமைத்து, அவர்களுக்கு இந்திய ஆட்சி பணியில் சேர்வதற்காக நடத்தப்படுகின்ற போட்டி தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக, சிறப்பு பயிற்சி அளித்திடும் ஒரு புதிய திட்டத்தினை செயல்படுத்திட அரசு ஆணை வழங்கி உள்ளது.
கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் குழந்தைகள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று பயன் பெறலாம்.

இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை www.fis-h-e-r-ies.tn.gov.in என்ற மீன்வளத்துறையின் இணையதளத்தில் கட்டணம் இல்லாமல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை மண்டல மீன்துறை இணை இயக்குனர்கள் மற்றும் மாவட்ட மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் நேரில் சென்று இலவசமாக பெற்று கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் மீன்வளத்துறை இணையதளத்தில் உள்ள விரிவான அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் வருகிற 5-ந்தேதி மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட மீன்துறை உதவி இயக்குனர்கள் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story