தஞ்சை கடைமடைக்கு காவிரி தண்ணீர் வராததால் 10 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் பாதிப்பு
தஞ்சை கடைமடை பகுதிக்கு காவிரி தண்ணீர் வராததால் 10 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதில் நடவடிக்கை எடுக்க கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ., விவசாயிகள் மனு அளித்தனர்.
திருச்சி,
திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்திற்கு நேற்று தஞ்சை மாவட்டம் திருவையாறு சட்டமன்ற தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. துரை.சந்திரசேகரன் தலைமையில் பூதலூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் முருகானந்தம், வடக்கு ஒன்றிய செயலாளர் செல்லக்கண்ணு, பொறியாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் லெனின், பூதலூர் ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் நந்தகுமார், திருச்சி தெற்கு மாவட்ட த.மா.கா.தலைவர் குணா மற்றும் பூதலூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் வந்தனர்.
பின்னர் அங்கு தலைமை பொறியாளர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-
காவிரி ஆற்றில் கரூர் மாவட்டம் மாயனூரில் பிரியும் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் பாசனத்தின் கடைமடை பகுதியான தஞ்சை மாவட்டம் திருவையாறு தொகுதிக்குட்பட்ட பூதலூர் உள்ளிட்ட 63 ஏரிகளில் 47 ஏரிகளுக்கு இன்றுவரை(அதாவது நேற்று வரை) பாசனத்திற்கு போதுமான தண்ணீர் வரவில்லை. இதனால் தஞ்சை கடைமடை பகுதி தண்ணீர் இன்றி காய்கிறது. இந்த நிலை கடந்த 6 ஆண்டுகளாக தொடர்கிறது. இதனால், சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 23-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி வரையும், ஆகஸ்டு 11-ந் தேதி முதல் இந்த மாதம்(செப்டம்பர்) 6-ந் தேதி வரையிலும் மேட்டூர் அணையில் தண்ணீர் முழுகொள்ளளவில் இருந்தது. பலமுறை காவிரி ஆற்றில் பாசன நீர் முழுமையாக சென்றும் மாயனூர் அணையில் இருந்து தஞ்சை மாவட்ட கடைமடை பகுதிக்கு பாசன தண்ணீர் வராதது மிகுந்த வேதனை அளிக்கிறது. அரசும், பொதுப்பணித்துறையும் தனிக்கவனம் செலுத்தினால்தான் பாசன தண்ணீரை பெறமுடியும். எனவே, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுபோன்று சென்னை பொதுப்பணித்துறை அரசு கூடுதல் செயலாளர் மற்றும் முதன்மை செயலாளருக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story