தாதர்- திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நாளில் மாற்றம்
தாதர்- திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நாள் மாற்றப்பட்டு உள்ளது. டிசம்பர் 6-ந் தேதி முதல் இந்த ரெயில் வியாழக்கிழமை தோறும் மும்பையில் இருந்து இயக்கப்படும்.
மும்பை,
மும்பையில் இருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தாதர்- திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 22629) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் வெள்ளிக்கிழமை இரவு 8.40 மணிக்கு மும்பை தாதரில் இருந்து புறப்படும். ஞாயிற்றுக்கிழமை காலை திருநெல்வேலி சென்றடையும். சூப்பர் பாஸ்ட் ரெயில் என்பதாலும், இயற்கை எழில் சூழந்த பகுதிகளான ரத்னகிரி, கோவா, கேரளா வழியாக இயக்கப்படுவதால் இந்த ரெயிலுக்கு பயணிகள் இடையே மவுசு அதிகம்.
இந்தநிலையில் சமீபத்தில் இந்த ரெயிலுக்கான முன்பதிவு நிறுத்தப்பட்டது. இதனால் பொங்கல் மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையில் இந்த ரெயிலில் ஊருக்கு செல்ல இருந்த தமிழர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்தநிலையில் தாதர்- திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் தினத்தை மத்திய ரெயில்வே மாற்றி உள்ளது. இதன்படி டிசம்பர் 6-ந் தேதி முதல் இந்த ரெயில் வியாழக்கிழமை தோறும் மும்பையில் இருந்து இயக்கப்படும். இதற்கான முன்பதிவு ேநற்று தொடங்கியது. மறுமார்க்கத்தில் திருநெல்வேலி- தாதர் எக்ஸ்பிரஸ் கால அட்டவணையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த கால அட்டவணையில் தான் இயக்கப்பட உள்ளது.
இந்த ரெயில் தற்போது இயக்கப்படுவது போல புதன்கிழமை தோறும் திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மும்பை வரும்.

Related Tags :
Next Story