நாகை மாவட்டத்தில் ரூ.5 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல் 61 பேர் கைது
நாகை மாவட்டத்தில் கடைகளில் விற்பனை செய்யப்பட்ட ரூ.5 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்டத்தில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டார். அதன்பேரில் நாகை மாவட்டத்தில் உள்ள கடைகளில் நேற்று முன்தினம் போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதில் 5 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 61 பேரை கைது செய்தனர். இதுபோல நாகை மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story