மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தனியார் வங்கி ஊழியர் சாவு
மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தனியார் வங்கி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
வேடசந்தூர்,
வேடசந்தூர் அருகே உள்ள கொசவபட்டியை சேர்ந்தவர் ஆனந்தகுமார்(வயது 25). இவர் தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 20-ந்தேதி இவர் தனது மோட்டார்சைக்கிளில் திண்டுக்கல்லில் இருந்து கரூர் நான்கு வழிச்சாலையில் லட்சுமணம்பட்டி அருகே வந்துகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக முன்னால் பெட்ரோல் இல்லாமல் தள்ளிக்கொண்டு சென்ற மற்றொரு மோட்டார்சைக்கிள் மீது மோதினார்.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த ஆனந்தகுமாருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் அதே மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் தலையில் வலி ஏற்பட்டதால் அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று ஆனந்தகுமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story