கருங்கல் அருகே பரிதாபம் வாகனம் மோதி பாதிரியார் பலி


கருங்கல் அருகே பரிதாபம் வாகனம் மோதி பாதிரியார் பலி
x
தினத்தந்தி 26 Sept 2018 4:15 AM IST (Updated: 25 Sept 2018 10:02 PM IST)
t-max-icont-min-icon

கருங்கல் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பாதிரியார் பரிதாபமாக இறந்தார்.

கருங்கல்,

கருங்கல் அருகே உள்ள தெருவுக்கடை பொட்டக்குழி பகுதியை சேர்ந்தவர் பென்னட் ஜோசப்ராஜ் (வயது 39). இவர் திரிபுராவில் பாதிரியராக பணியாற்றி வந்தார்.

தற்போது, கருங்கல் கண்டன்விளையில் உள்ள ஆலயத்துக்கு பிரார்த்தனை பணிக்காக வந்திருந்தார்.

நேற்று முன்தினம் இரவு அவர், தெருவுக்கடை பகுதியில் உறவினர் வீட்டு திருமண விழாவிற்கு சென்றார். அங்கிருந்து கண்டன்விளைக்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

பாலூர் அருகே தாளையங்கோட்டை பகுதியில் வந்தபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார்சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்த பென்னட் ஜோசப்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்த கருங்கல் போலீசார் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். விபத்தில் பலியான பென்னட் ஜோசப்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாதிரியாரின் சகோதரர் கிறிஸ்துராஜ் கருங்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், பென்னட் ஜோசப்ராஜ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது? என்பதை கண்டறிய அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Next Story