கிருஷ்ணகிரி மாவட்டம், பூட்டி கிடந்த அங்கன்வாடி மையம் திறப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே ‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக பூட்டி கிடந்த அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தொளுவபெட்டா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த குழந்தைகளின் வசதிக்காக அங்கன்வாடி மையம் ஒன்று கட்டப்பட்டது. ஆனால் அந்த கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்படாமல் மூடியே கிடந்தது.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘தினத்தந்தி’யில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மாவட்ட கலெக்டர் பிரபாகர் உத்தரவின் பேரில் பூட்டி கிடந்த அந்த அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டுள்ளது.
தற்போது திறக்கப்பட்ட அந்த அங்கன்வாடி மையத்தில் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Tags :
Next Story