திருப்பத்தூர் அருகே மகள் திட்டியதால் மனமுடைந்த பெண் தற்கொலை


திருப்பத்தூர் அருகே மகள் திட்டியதால் மனமுடைந்த பெண் தற்கொலை
x
தினத்தந்தி 26 Sept 2018 3:15 AM IST (Updated: 26 Sept 2018 12:31 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே பூலாங்குறிச்சியில் மகள் திட்டியதால் மனமுடைந்த தாய் தற்கொலை செய்துகொண்டார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே பூலாங்குறிச்சி கண்ணிமாபறை பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன் மனைவி சின்னககருப்பி (வயது 38). இவருககு 2 பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். மூத்த மகள் முத்துலெட்சுமி பிளஸ்–1 படித்து வருகிறார். இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மகள் சரியாக படிககவில்லை என்று தாய் கண்டித்துள்ளார்.

இதை கேட்டு ஆத்திரமடைந்த மகள், தாயை பதிலுககு சரமாரியாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சின்னககருப்பி வீட்டில் இருந்து கோபித்துககொண்டு வெளியே சென்றுவிட்டார். அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைககவில்லை. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

இந்தநிலையில், நேற்று பூலாங்குறிச்சி மலைப்பகுதியில் அழுகிய நிலையில் ஒரு பெண் உடல் கிடப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் பூலாங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அங்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் இறந்து கிடந்த பெண் சின்னக்கருப்பி என்பதும், உடல் அருகே பூச்சி மருந்து பாட்டில் கிடந்ததும் தெரியவந்தது.

மேல் விசாரணையில் மகள் திட்டியதால், பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் பெண்ணின் உடலை பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு பின்பு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து பூலாங்குறிச்சி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழககு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Next Story