கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி வானொலி நிலைய அதிகாரிகள் வாயிற் முழக்க போராட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி வானொலி நிலைய அதிகாரிகள் வாயிற் முழக்க போராட்டம்
x
தினத்தந்தி 26 Sept 2018 4:15 AM IST (Updated: 26 Sept 2018 12:32 AM IST)
t-max-icont-min-icon

பதவி உயர்வு உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி வானொலி நிலைய அதிகாரிகள் வாயிற் முழக்க போராட்டம்.

திருச்சி,

அகில இந்திய வானொலி நிலையம் மற்றும் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி பிரிவில் அதிகாரிகள் அந்தஸ்தில் பணியாற்றும் நிலைய இயக்குனர், உதவி இயக்குனர், தலைமை இயக்குனர், கூடுதல் தலைமை இயக்குனர் உள்ளிட்டவர்களுக்கு கடந்த 30 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்பட வில்லை என்றும், எனவே, உடனடியாக பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்றும், காலியான பணியிடங்களில் பி.எஸ்.என்.எல். மற்றும் ராணுவத்தில் உள்ளவர்களை மாற்றாக(டெப்டேசன்) நியமிப்பதை கைவிட வேண்டும் என்றும், 60 சதவீத காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மதிய உணவு இடைவேளையின்போது அனைத்து வானொலி மற்றும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலைய அலுவலகம் முன்பு வாயிற் முழக்க போராட்டம் நடந்தது.

அதேபோன்று திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள அகில இந்திய வானொலி நிலைய நுழைவு வாயில் முன்பு அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சி பிரிவு மற்றும் தூர்தர்ஷன் நிகழ்ச்சி தயாரிப்பு கூட்டமைப்பு சார்பில் வாயிற் முழக்க போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவரும், நிகழ்ச்சி இயக்குனருமான(பொறுப்பு) கே.நடராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் என்.முருகேசன் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் தாராதேவி, சின்னசாமி, ஒலிபரப்பு அலுவலர்கள் கோபாலகிருஷ்ணன், முருகேஸ்வரி, விக்னேஷ்வரன், ஜீவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. வருகிற 28-ந் தேதி வரை வாயிற்முழக்க போராட்டம் தொடரும் என்றும், அதன் பின்னரும் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்றால், வருகிற 3-ந் தேதி முதல் போராட்டம் தீவிரமடையும் என நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Next Story