காதலி இறந்த துக்கத்தில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


காதலி இறந்த துக்கத்தில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 26 Sept 2018 3:15 AM IST (Updated: 26 Sept 2018 12:33 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே காதலி தற்கொலை செய்து கொண்ட துக்கத்தில், தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தேனி,


தேனி அருகே உள்ள அரண்மனைப்புதூர் சத்திரப்பட்டி சாலையை சேர்ந்த செல்வராஜ் மகன் தட்சணாமூர்த்தி (வயது 23). இவர் கூலி வேலை செய்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்துள்ளார். அந்த பெண்ணுக்கு 17 வயதே ஆகி இருந்ததாக கூறப்படுகிறது.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்த காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே அந்த பெண்ணை அவருடைய பெற்றோர் தேவாரம் அருகே சிந்தலைச்சேரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தனது காதலி இறந்ததில் இருந்து தட்சணாமூர்த்தி மனம் உடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பழனிசெட்டிபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தட்சணாமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அவருடைய தாயார் லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story