டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா
டாஸ்மாக் கடை திறக்கப்படுவதாக தகவலறிந்த ஊத்தங்கால் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாடாலூர்,
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் ஊட்டத்தூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வந்த ஒரு டாஸ்மாக் கடை கடந்த ஓராண்டுக்கு முன்பு பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக மூடப்பட்டது. அதனையடுத்து ஊத்தங்கால் பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்க முயற்சி செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியதால் கடை திறக்கப்படவில்லை. இந்நிலையில் அந்த இடத்தில் நேற்று மீண்டும் டாஸ்மாக் கடை திறக்கப்படுவதாக தகவலறிந்த ஊத்தங்கால் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன், பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசார், பொதுமக்களிடம் அனைவரும் கலைந்து செல்லுங்கள், இல்லையென்றால் கைது செய்யப்படுவீர்கள் என்று கூறினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதனால் 2 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச்செல்ல முயன்றதை அடுத்து, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.

Related Tags :
Next Story