மருந்து கடை உரிமையாளர்கள் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினர்


மருந்து கடை உரிமையாளர்கள் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினர்
x
தினத்தந்தி 26 Sept 2018 4:30 AM IST (Updated: 26 Sept 2018 1:14 AM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்து தமிழகத்தில் வருகிற 30-ந்தேதி மருந்து கடைகள் அனைத்தும் அடைக்கப்படும் என மருந்து வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ஜெயங்கொண்டம்,

ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்து தமிழகத்தில் வருகிற 30-ந்தேதி மருந்து கடைகள் அனைத்தும்அடைக்கப்படும் என மருந்து வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மருந்துகள் உயிர்காக்கும் பொருளாகும். காலணி போன்ற பல்வேறு பொருட்கள் வாங்குவது போல ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரியலூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க மாவட்ட தலைவர் கருணாகரன் தலைமையில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் பகுதி மருந்து கடை உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கருப்பு பட்டை அணிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து மருந்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும் இதுபற்றி கருணாகரன் கூறுகையில், ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யும் போது மருந்துகள் மாறி விடுவது போன்ற சூழலும் கால அவகாசம் முடிந்த மருந்துகளும் வர வாய்ப்புள்ளதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும். மேலும் மருந்தும், மருத்துவமும் மகத்துவமானது, அதனை நோயாளிகளுக்கு நேரடியாக மட்டுமே கொடுக்க வேண்டும் என்று கூறினார். 

Next Story