பனவடலிசத்திரம் அருகே இளம்பெண் விஷம் குடித்து சாவு
பனவடலிசத்திரம் அருகே இளம்பெண் விஷம் குடித்து இறந்தார்.
பனவடலிசத்திரம்,
பனவடலிசத்திரம் அருகே இளம்பெண் விஷம் குடித்து இறந்தார்.
இளம்பெண்
நெல்லை மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே உள்ள சம்பகுளம் கிராமத்தை சேர்ந்தவர் கொம்பையா. விவசாயி. இவருக்கு மகாலட்சுமி, சங்கீதா (வயது 18) என்ற 2 மகள்கள் உள்ளனர். அவர்களில் சங்கீதா 11-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டு வேலைகளை கவனித்து வந்தார். சம்பவத்தன்று இவரிடம் அவருடைய பெற்றோர் வீட்டில் உள்ள மாடுகளை தோட்டத்துக்கு கூட்டிச் செல்லுமாறு கூறியுள்ளனர். அதற்கு சங்கீதா மறுத்துள்ளார்.
விஷம் குடிதத் சாவு
இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து சங்கீதா குடித்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கழுகுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதும், மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் சங்கீதா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் அய்யாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story