போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய மீனவர் கைது உறவினர்கள் சாலை மறியல்


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய மீனவர் கைது உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 26 Sept 2018 4:00 AM IST (Updated: 26 Sept 2018 2:28 AM IST)
t-max-icont-min-icon

காசிமேட்டில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய மீனவர் கைது செய்யப்பட்டார். அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவொற்றியூர்,

சென்னை காசிமேடு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ராஜசேகர் (வயது 54). இவர் நேற்று முன்தினம் இரவு தண்டையார்பேட்டை தாண்டவராயன் தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அங்கு குடிபோதையில் நின்ற நபரை பிடித்து விசாரித்தார். அப்போது அந்த நபர், சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும், அவரது சட்டையை கிழித்ததுடன் சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த ராஜசேகர் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

சாலை மறியல்

இந்த சம்பவம் தொடர்பாக காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரை தாக்கியது, காசிமேடு புதுமனை குப்பம் 3-வது தெருவை சேர்ந்த மீனவர் தனசேகர் (34) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்று மாலை தனசேகரின் மனைவி வதனி மற்றும் உறவினர்கள், தனசேகரை எங்களிடம் காட்ட வேண்டும் எனக்கூறி காசிமேடு எஸ்.என்.செட்டி தெருவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் வதனியிடன், தனசேகரை செல்போனில் பேச வைத்தனர். பின்னர் அனைவரும் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட தனசேகரை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story