மாவட்ட செய்திகள்

கொள்ளிடம் அருகே சாராயம் விற்ற 3 பேர் கைது + "||" + 3 persons arrested for selling liquor near Kollam

கொள்ளிடம் அருகே சாராயம் விற்ற 3 பேர் கைது

கொள்ளிடம் அருகே சாராயம் விற்ற 3 பேர் கைது
கொள்ளிடம் அருகே சாராயம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 500 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
கொள்ளிடம்,

நாகை மாவட்டம், கொள்ளிடம் பகுதியில் புதுப்பட்டினம் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலியமூர்த்தி, சேகர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாராயம் விற்ற 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கொள்ளிடம் அருகே வேட்டங்குடி கிராமத்தை சேர்ந்த குணசேகரன் (வயது 50), கொடக்காரமூலையை சேர்ந்த ராஜேந்திரன் (55), கடலூர் மாவட்டம் ஜெயங்கொண்டபட்டினத்தை சேர்ந்த சுதாகர் (35) ஆகியோர் என்பது தெரியவந்தது.


உடனே போலீசார், அவர்களிடம் இருந்து 500 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர். இதுகுறித்து புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாராயம் விற்ற குணசேகரன், ராஜேந்திரன், சுதாகர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். 

ஆசிரியரின் தேர்வுகள்...