156 பள்ளி-கல்லூரிகளில் கல்வி தரத்தை உயர்த்த மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் பெங்களூரு மாநகராட்சி ஒப்பந்தம்


156 பள்ளி-கல்லூரிகளில் கல்வி தரத்தை உயர்த்த மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் பெங்களூரு மாநகராட்சி ஒப்பந்தம்
x
தினத்தந்தி 26 Sept 2018 4:00 AM IST (Updated: 26 Sept 2018 3:15 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் 156 பள்ளி-கல்லூரிகளில் கல்வி தரத்தை உயர்த்தும் நோக்கத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் பெங்களூரு மாநகராட்சி ஒப்பந்தம் செய்து கொண்டது.

பெங்களூரு, 

பெங்களூருவில் 156 பள்ளி-கல்லூரிகளில் கல்வி தரத்தை உயர்த்தும் நோக்கத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் பெங்களூரு மாநகராட்சி ஒப்பந்தம் செய்து கொண்டது.

பெங்களூரு மாநகராட்சி ஒப்பந்தம்

பெங்களூருவில் 156 பள்ளி-கல்லூரிகளில் கல்வி தரத்தை உயர்த்தும் நோக்கத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் பெங்களூரு மாநகராட்சி நேற்று ஒப்பந்தம் செய்து கொண்டது. மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரிகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் முன்னிலையில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பரமேஸ்வர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெங்களூருவில் கல்வியில் தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடுகையில் மாநகராட்சி பள்ளிகளின் தரம் குறைவாக உள்ளது. இதனால் பெற்றோர் தங்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். அதனால் மாநகராட்சி பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்பங்களை...

கல்வி தரத்தை உயர்த்த மைக்ரோசாப்ட் நிறுவனம் ‘ரோஷினி சீர்சிகே‘ என்ற திட்டத்தின் கீழ் முன்வந்துள்ளது. இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கல்வியில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குவது, குழந்தைகளுக்கு கணினி கல்வி போன்ற பல்வேறு திட்டங்களை அந்த நிறுவனம் செயல்படுத்த உள்ளது. இந்த மாநகராட்சி பள்ளிகளை மைக்ரோசாப்ட் நிறுவனமே 5 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும். அதன் பிறகு அந்த பள்ளிகளை மீண்டும் மாநகராட்சியிடமே ஒப்படைத்துவிடும். இதற்காக மாநகராட்சி சார்பில் நிதி எதுவும் வழங்குவது இல்லை. முழு செலவுகளையும் அந்த நிறுவனமே ஏற்றுக்கொள்கிறது. இதற்காக அந்த நிறுவனம் ரூ.600 கோடி செலவழிக்க இருக்கிறது.

உரிமத்தை ரத்து செய்ய...

குடியிருப்பு பகுதிகளில் வணிக நடவடிக்கைகளை தடுப்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறோம். குடியிருப்பு பகுதிகளில் பெறப்பட்டுள்ள வணிக உரிமத்தை ரத்து செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். புதிய விளம்பர கொள்கையை வகுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஐகோர்ட்டு உத்தரவை அடுத்து மாநகராட்சி அதிகாரிகள் வேகமாக பணியாற்றுகிறார்கள். மற்ற நேரங்களில் அவர்கள் பணியில் மெத்தனம் காட்டுவது தெரிகிறது. இது வேதனை அளிப்பதாக உள்ளது. பணியில் மெத்தனமாக இருப்பதை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

Next Story