மின்வெட்டை கண்டித்து அரிக்கன்விளக்கு ஏந்தி போராட்டம் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிக்கை
குமரி மாவட்டத்தில் மின்வெட்டை கண்டித்து அரிக்கன்விளக்கு ஏந்தி போராட்டம் நடத்தப்படும் என்று ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
கருங்கல்,
குமரி மாவட்டத்தில் மின்சார வாரியம், நாகர்கோவில், தக்கலை, குழித்துறை என 3 கோட்டங்களாக செயற்பொறியாளர்களின் கீழ் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மொத்தம் 56 பிரிவு அலுவலகங்கள் உள்ளன. இந்த பிரிவு அலுவலகங்களில் இருந்து சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமானதால், மின் தேவையும் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணி முதல் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது.
அதேபோல் நேற்று காலை முதல் 4 மணி நேரமாக மின்வினியோகம் தடை செய்யப்பட்டது. மேலும், இதுபோல் தொடர்ந்து அறிவிக்கப்படாமல் மின் வினியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்த மின்வெட்டால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். மேலும், குழந்தைகள், நோயாளிகள், முதியவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகளும் படிக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். இரவு நேரம் ஏற்படும் மின்தடையால் மக்கள் தூக்கமின்றி தவிக்கும் நிலை நிலவுகிறது. ஆனால் மின்சாரத்துறை அமைச்சர் தமிழகத்தில் மின் வெட்டு என்பது இல்லவே இல்லை என்று கூறியுள்ளார்.
மாவட்ட மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் நிர்வாக சீர்கேட்டால் தான் இதுபோன்ற மின்தடை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு சீராக மின்வினியோகம் கிடைக்க செய்ய வேண்டும்.
இதேபோல் மின்தடை மற்றும் வெட்டு தொடரும் பட்சத்தில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பொதுமக்களை திரட்டி அனைத்து மின்வாரிய அலுவலகத்திலும் அரிக்கன்விளக்கு ஏந்தி போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story