ஈத்தாமொழி அருகே காவலாளியை கொல்ல முயன்ற வாலிபர் கைது


ஈத்தாமொழி அருகே காவலாளியை கொல்ல முயன்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 27 Sept 2018 3:45 AM IST (Updated: 26 Sept 2018 10:48 PM IST)
t-max-icont-min-icon

ஈத்தாமொழி அருகே காவலாளியை கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஈத்தாமொழி,

ஈத்தாமொழி அருகே உள்ள மங்காவிளை பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 42). இவர் ஈத்தாமொழியை அடுத்துள்ள புதூர் பூமி பாதுகாப்பு சங்கத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் இவர் சாப்பாடு வாங்குவதற்காக பொட்டல் விலக்கிற்கு வந்தார். சாப்பாடு வாங்கிவிட்டு வீட்டுக்கு  சென்றார். அப்போது, அங்கு ஒரு வாலிபர் வந்தார். அந்த வாலிபர், சந்திரசேகரை மிரட்டி செலவிற்கு பணம் கேட்டார். அதற்கு அவர் பணம் தர மறுத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், சந்திரசேகரை கம்பியால் தாக்கி கொல்ல முயன்றார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து சந்திரசேகர் ஈத்தாமொழி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், சப்–இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

 விசாரணையில், சந்திரசேகரை கொல்ல முயன்றது பழவிளை பூவன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் (22) என்பது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் ரஞ்சித்குமாரை கைது செய்தனர்.

கைதான ரஞ்சித்குமார் மீது ஈத்தாமொழி, ராஜாக்கமங்கலம், நேசமணிநகர், ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story