விபத்தில் சிக்காமல் ரெயிலை இயக்கிய ஓட்டுனர்களுக்கு ரெயில்வே பொது மேலாளர் பாராட்டு


விபத்தில் சிக்காமல் ரெயிலை இயக்கிய ஓட்டுனர்களுக்கு ரெயில்வே பொது மேலாளர் பாராட்டு
x
தினத்தந்தி 27 Sept 2018 3:15 AM IST (Updated: 27 Sept 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

ரெயிலை விபத்தில் சிக்காமல் இயக்கிய ஓட்டுனர்களுக்கு ரெயில்வே பொது மேலாளர் பாராட்டு தெரிவித்தார்.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த 11-ந் தேதி பாலக்காடு-கோட்டகாடு இடையே சரக்கு ரெயிலை செய்யது கோசி மற்றும் சசிகுமார் ஆகியோர் இயக்கினர். சரக்கு ரெயில் தண்டவாளத்தில் சென்றபோது திடீரென ஒரு அதிர்வும், மிகுந்த சத்தமும் கேட்டது.

இதையடுத்து சரக்கு ரெயிலை குறைந்த வேகத்தில் இயக்கி அடுத்த ரெயில் நிலையம் கொண்டு சென்றனர். மேலும் இந்த அதிர்வு மற்றும் சத்தம் குறித்து நிலைய அதிகாரியிடமும் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து சாமர்த்தியமாக செயல்பட்டு சரக்கு ரெயில் கவிழாமல் விபத்தை தவிர்த்த ரெயில் ஓட்டுனர்களான செய்யது கோசி மற்றும் சசிகுமார் ஆகியோரை தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.கே.குல்ஷ் ரஸ்தா நேரில் அழைத்து ரூ.2 ஆயிரம், சான்றிதழும் வழங்கினார்.

Next Story