அண்ணா பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி


அண்ணா பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி
x
தினத்தந்தி 27 Sept 2018 4:00 AM IST (Updated: 27 Sept 2018 1:57 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் அண்ணா பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி நடைபெற்றது.

திருவாரூர்,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருவாரூர் மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில் அண்ணா பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது.

இதில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 15 பள்ளிகளை சேர்ந்த 113 மாணவர்கள், 85 மாணவிகள் கலந்து கொண்டனர். 13 வயது, 15 வயது, 17 வயது என 3 பிரிவுகளாக போட்டிகள் நடந்தன.

போட்டி முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார்.

விழாவில் வட்டார போக்குவரத்து அதிகாரி செந்தில்குமார் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினார். முன்னதாக மாவட்ட விளையாட்டு அதிகாரி பாபு வரவேற்றார். முடிவில் ஆக்கி பயிற்றுனர் ரோஸ் பாத்திமாமேரி நன்றி கூறினார்.

Next Story