திருச்சி ரெயில்வே கூட்டுறவு சங்க தேர்தல் திட்டமிட்டபடி 1-ந் தேதி நடைபெறும்
திருச்சி ரெயில்வே கூட்டுறவு சங்க தேர்தல் திட்டமிட்டபடி 1-ந் தேதி நடைபெறும் எஸ்.ஆர்.எம்.யு. பொதுச்செயலாளர் கண்ணையா பேட்டி.
செம்பட்டு,
எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் என். கண்ணையா நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு சங்க துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் தலைமையில் வரவேற்பு அளித்தனர்.பின்னர் கண்ணையா நிருபர்களிடம் கூறியதாவது:-
ரெயில்வே இலாகா ஒன்று தான் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க கூடிய ஒரு துறையாக உள்ளது. ரெயில்வே துறை தனியார்மயமாக்கப்பட்டால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கேள்விக்குறியாகி விடும். எனவே மத்திய அரசு ஒப்புக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என முடிவு செய்து இருந்தோம். மக்கள் நலனை கருத்தில் கொண்டு அதனை தள்ளி வைத்தோம். வருகிற பிப்ரவரி மாதம் டெல்லியில் சகோதர சங்கங்களுடன் கலந்து பேசி அடுத்த கட்ட வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது பற்றி முடிவு செய்யப்படும்.
திருச்சி ரெயில்வே கூட்டுறவு நாணய சங்க தேர்தலை நிறுத்தும்படி மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இடைக்கால தடை விதித்தார்கள். இதனை எதிர்த்து எங்கள் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை என ஆதாரப்பூர்வமாக நிரூபித்தோம். வருகிற 1-ந்தேதி திட்டமிட்டபடி தேர்தல் நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பொன்மலை ரெயில்வே பணிமனையில் தொழிலாளர்களிடம் கண்ணையா இன்று காலை ரெயில்வே கூட்டுறவு சங்க தேர்தலில் இயக்குனர் பதவிக்கு போட்டியிடும் எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்க வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.

Related Tags :
Next Story