கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட கருவூலம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருச்சி,
தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட கருவூலம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முரளி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பாபு முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் பெரியசாமி, புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்க மாநில பொருளாளர் பால்பாண்டியன் பங்கேற்றனர். ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு மேலாண்மை திட்டம் மூலம் கருவூலத்துறையில் ஆட்குறைப்பை அமல்படுத்த முயற்சிக்கும் தமிழக அரசை கண்டித்தும், ஓய்வூதியத்தில் நிலுவைதொகை வழங்கும்போது ஏற்படும் தவறுகளுக்கு கருவூல பணியாளர்களே பொறுப்பு என்ற அரசாணை 286-ஐ ரத்து செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட பொருளாளர் பீட்டர் மற்றும் கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story