காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் எனக்கு எதிராக பேசவில்லை துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் சொல்கிறார்


காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் எனக்கு எதிராக பேசவில்லை துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் சொல்கிறார்
x
தினத்தந்தி 27 Sept 2018 4:00 AM IST (Updated: 27 Sept 2018 3:17 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் எனக்கு எதிராக பேசவில்லை என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறினார்.

பெங்களூரு, 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் எனக்கு எதிராக பேசவில்லை என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறினார்.

முன்மாதிரியாக உள்ளது

பெங்களூரு வசந்தநகர் மில்லர் ரோட்டில் பீல்டு மார்ஷல் கரியப்பா சிலை நிறுவப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கலந்துகொண்டு கரியப்பா சிலையை திறந்து வைத்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பீல்டு மார்ஷல் கரியப்பா நாட்டிற்காக அதிகளவில் சேவையாற்றினார். அவரது உழைப்பு அபாரமானது. கரியப்பாவின் வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்கு முன்மாதிரியாக உள்ளது. இந்த சந்திப்புக்கு கரியப்பாவின் பெயரை சூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பரிசீலித்து முடிவு எடுக்கப்படும்.

எனக்கு எதிராக பேசவில்லை

பதவி உயர்வில் இட ஒதுக்கீடு குறித்து சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பை இன்னும் முழுமையாக படிக்கவில்லை. அதை படித்த பிறகு நான் கருத்து தெரிவிக்கிறேன். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், அவர்கள் யாரும் எனக்கு எதிராக பேசவில்லை. அவர்கள் தங்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறினர். முதல்-மந்திரியை நேரடியாக சந்திக்க முடியாவிட்டால், என்னிடம் உங்களின் பிரச்சினையை கூறுங்கள். அதை உங்களின் பிரதிநிதியாக நான் குமாரசாமியிடம் தெரிவிக்கிறேன். பிரச்சினைகளை தீர்த்து வைக்கிறேன் என்று உறுதி அளித்துள்ளேன்.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை

அதன் பிறகு பெங்களூருவில் நேற்று போலீஸ் அதிகாரிகளுடன் பரமேஸ்வர் ஆலோசனை நடத்தினார். இதில் போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜூ உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “அப்போது நிருபதுங்கா ரோட்டில் உளவுப்பிரிவு கட்டிடத்தை இடித்துவிட்டு ரூ.130 கோடி செலவில் அங்கு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. வருகிற நவம்பர் மாதம் அடிக்கல் நாட்டு விழா நடத்தப்படும்“ என்றார்.

Next Story