கோவில் திருப்பணிகளை விரைந்து முடிக்க கோரி கவர்னருக்கு மனு அனுப்பும் போராட்டம்
கும்பகோணத்தில் கோவில் திருப்பணிகளை விரைந்து முடிக்க கோரி கவர்னருக்கு மனு அனுப்பும் போராட்டம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் சார்பில் நடைபெற்றது.
கும்பகோணம்,
கும்பகோணம் அருகே துக்காச்சியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோவில் திருப்பணிக்கு அரசு ரூ.55 லட்சம் ஒதுக்கி திருப்பணி தொடங்கியது. இந்த பணிகள் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதைப்போல மானம்பாடி நாகநாதர் கோவில் திருப்பணிகளும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே கோவில் திருப்பணிகளை விரைந்து முடிக்க கோரி ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் சார்பில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு மனு அனுப்பும் போராட்டம் கும்பகோணம் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்றது. இதில் திருவடிக்குடில் சுவாமிகள் தலைமையில் 100–க்கும் மேற்பட்ட சிவனடியார்கள், இந்து அமைப்பினர்கள், பக்தர்கள், உழவாரப் பணி தொண்டர்கள் கையெழுத்திட்டு கவர்னருக்கு கோரிக்கை மனு அனுப்பினர்.
Related Tags :
Next Story