19 வயது பெண்ணுக்கு சத்துணவு அமைப்பாளர் பணி - கலெக்டர் வழங்கினார்
பெற்றோரை இழந்து வறுமையில் தவித்த 19 வயது இளம் பெண்ணுக்கு சத்துணவு அமைப்பாளர் பணிக்கான உத்தரவை அவரது வீட்டிற்கே நேரடியாக சென்று கலெக்டர் வழங்கினார்.
ஆரணி,
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கனிகிலுப்பை கிராமத்தை சேர்ந்தவர் வனிதா. சத்துணவு உதவியாளராக பணிபுரிந்து வந்த அவர், கடந்த 2014-ம் ஆண்டு இறந்து விட்டார். இவரது கணவர் வெங்கடேசன் கடந்த ஓராண்டிற்கு முன்பு சிறுநீரக கோளாறு ஏற்பட்டு இறந்து விட்டார். இவர்களது மகள்கள் ஆனந்தி (வயது 19), அபி (17) மற்றும் மகன் மோகன் (16) ஆகியோர் பாட்டி ராணியின் பராமரிப்பில் இருந்து வந்தனர்.
இதனை தொடர்ந்து ஆனந்தி கடந்த மாதம் 13-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தார். அதில் “தனது தாயார் பணிக்காலத்தில் இறந்து விட்டார். அதன்பின் பாட்டியின் பராமரிப்பில் தங்கை, தம்பியுடன் வசித்து வருகிறேன். அவர்களை காப்பாற்றுவதற்காக நான் கூலி வேலைக்கு சென்று வருகிறேன். எனவே கருணை அடிப்படையில் எனக்கு வேலை வழங்க வேண்டும்” என தெரிவித்திருந்தார். பிளஸ்-2 முடித்த ஆனந்தி கல்லூரி ஒன்றில் பி.ஏ.படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி பாட்டி ராணியும் இறந்து விட்டதால் திக்கற்ற நிலையில் தவித்த ஆனந்தி கலெக்டரை மீண்டும் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கியுள்ளார். அப்போது அவரிடம் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கூறுகையில், “19 வயதுள்ளவருக்கு அரசுப் பணி வழங்க எவ்வித முகாந்திரமும் இல்லை, எனினும் தமிழக அரசு தலைமை செயலாளருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார்.
நேற்று கனிகிலுப்பை கிராமத்திற்கு வந்த கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தன்னிடம் மனு அளித்த ஆனந்தியின் வீட்டிற்கே நேரடியாக சென்றார். அப்போது ஆனந்தி மற்றும் அவரது தங்கை, தம்பி ஆகியோரின் படிப்பு குறித்து விசாரித்து தைரியப்படுத்தினார். அத்துடன் அவரது வீட்டிலேயே மதிய உணவை அருந்திய கலெக்டர், ஆனந்தியிடம் “உங்களுடைய கஷ்டங்களை அரசுக்கு தெரிவித்து இதே ஊரில் சத்துணவு அமைப்பாளராக பணிசெய்ய உத்தரவினை வழங்க வந்துள்ளேன்” என்றார். தொடர்ந்து பணி உத்தரவினை ஆனந்தியிடம் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வழங்கி அதற்கான நகல்களில் அவரே கையெழுத்துப் பெற்றார்.
பின்னர் நிருபர்களிடம் மாவட்ட கலெக்டர் கூறியதாவது:-
இளம்பெண் ஆனந்தி கடந்த மாதம் என்னை சந்தித்து மனு அளித்தபோது அவரது குடும்ப சூழ்நிலைகளை எடுத்துரைத்தார். நானும் அரசு செயலாளரிடம் தகவல் அனுப்பி 17 வயதிலேயே குடும்ப சுமைகளை ஏற்று தொடர்ந்து விடாமுயற்சிகளை மேற்கொண்டதால் தற்போது அவரது சொந்த ஊரிலேயே சத்துணவு அமைப்பாளராக பணி நியமனம் செய்ய பரிந்துரைத்தேன்.
அதன்படி அரசு உத்தரவின் பேரில் பணி உத்தரவினை வழங்கியுள்ளேன். இப்பெண்ணை தொலைதூர கல்வி மையம் மூலம் பி.ஏ., தமிழ் படிக்கவும், இவரது சகோதரி அபி, இரும்பேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் தொடர்ந்து இலவசமாக படிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனந்தியின் தம்பி மோகன் எஸ்.வி.நகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அவருடைய கல்வி தொடர நடவடிக்கை எடுக்கப்படும்.
இவர்கள் வசித்து வரும் வீடு முழுவதும் சேதம் அடைந்துள்ளதால் பசுமைவீடு திட்டத்தின் கீழ் அரசே முன்னின்று வீடு கட்டித் தருவதற்கும் உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு உதவிகரமாக ஆரணி அரிமா சங்கம் சார்பில் சைக்கிள் ஒன்றும், 2 மாதத்திற்குண்டான உதவிப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது. இனி அவர்கள் யாரையும் நம்பி இருக்கவேண்டிய அவசியமில்லை. மாதம் ரூபாய் 9 ஆயிரம் சம்பளம் பெற்று பள்ளியில் சத்துணவு அமைப்பாளராகவும், வீட்டில் குடும்பத் தலைவராகவும் இருந்து பொறுப்பாற்றுவார். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது ஆரணி வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) உமாமகேஸ்வரி, தாசில்தார் கிருஷ்ணசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வி.திலகவதி, எம்.பாண்டியன், வருவாய் ஆய்வாளர்கள் தேவி, தட்சிணாமுர்த்தி, ஊராட்சி செயலாளர் விஜயகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் இருந்தனர். மாவட்ட கலெக்டரே இந்த இளம்பெண்ணின் கோரிக்கையை ஏற்று கிராமத்திற்கு வந்து பணி உத்தரவு வழங்கியதை கிராம மக்கள் ஆச்சரியமாக பார்த்து பாராட்டினர்.

Related Tags :
Next Story