தடை செய்யப்பட்ட நேரத்தில் லாரிகள் வந்தால் நடவடிக்கை - போலீசார் எச்சரிக்கை
ஆம்பூர் பஜாருக்குள் தடை செய்யப்பட்ட நேரத்தில் லாரிகள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளுக்கான ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.
ஆம்பூர்,
ஆம்பூர் பஜார் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. மேலும் சரக்கு லாரிகள் எந்த நேரமும் பஜாருக்குள் வந்து சரக்குகளை இறக்கி செல்கிறது. இவ்வாறு சரக்கு லாரிகள் பஜார் பகுதியில் ஆங்காங்கே நின்று சரக்குகளை இறக்குவதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இந்த நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் தொடர்ந்து வைக்கப்பட்டு வந்தது.
அதன்பேரில் ஆம்பூர் நகர வர்த்தக சங்க அலுவலகத்தில் வியாபாரிகள், லாரி உரிமையாளர்கள், மூட்டை இறக்கும் தொழிலாளர்களுடன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வியாபாரிகள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.
அதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சீனிவாசன் பேசியதாவது:-
ஆம்பூர் பஜார் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வியாபாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சரக்கு லாரிகள் காலை 8 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணிவரை பஜாருக்குள் வரக்கூடாது. அவ்வாறு மீறி வரும் வாகனங்கள் பறிமுதல் செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
வியாபாரிகள் வேண்டுகோளை ஏற்று பஜார் பகுதியில் கூடுதல் போலீசார் நிறுத்தப்படுவார்கள். மேலும் பஜார் பகுதியில் 12 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் நகர வர்த்தக சங்க தலைவர் கே.ஆர்.துளசிராமன், வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் சி.கிருஷ்ணன், வர்த்தக சங்க செயலாளர் அண்ணாமலை, துணை செயலாளர் ஒ.வி.ராம்குமார் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள், வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story