பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.43½ லட்சம் கையாடல் செய்த காசாளர் சிக்கினார் உல்லாசமாக வாழ்ந்தது அம்பலம்


பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.43½ லட்சம் கையாடல் செய்த காசாளர் சிக்கினார் உல்லாசமாக வாழ்ந்தது அம்பலம்
x
தினத்தந்தி 27 Sept 2018 4:45 AM IST (Updated: 27 Sept 2018 4:34 AM IST)
t-max-icont-min-icon

பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.43½ லட்சம் கையாடல் செய்த காசாளரை போலீசார் கைது செய்தனர். அந்த பணத்தை கொண்டு அவர் உல்லாசமாக வாழ்ந்தது அம்பலமானது.

மும்பை, 

பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.43½ லட்சம் கையாடல் செய்த காசாளரை போலீசார் கைது செய்தனர். அந்த பணத்தை கொண்டு அவர் உல்லாசமாக வாழ்ந்தது அம்பலமானது.

பணம் மாயம்

மும்பை லோயர் பரேல் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியில் காசாளராக இருந்து வந்தவர் ஹேமந்த் ஜாதவ். இவர் அண்மையில் விடுமுறையில் சென்றிருந்தார். இதனால் அவரது பணிக்கு மற்றொரு ஊழியர் காசாளராக பணி செய்து வந்தார்.

அப்போது வங்கியில் ரூ.43 லட்சத்து 50 ஆயிரம் மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர் சம்பவம் குறித்து வங்கி மேலாளருக்கு தெரியப்படுத்தினார்.

காசாளர் கைது

இது தொடர்பாக வங்கி மேலாளர் என்.எம். ஜோஷி மார்க் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் காசாளார் ஹேமந்த் ஜாதவ் பணத்தை கையாடல் செய்திருந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

விசாரணையில் அவர் வங்கி பணத்தை கையாடல் செய்ததை ஒப்புக் கொண்டார். அந்த பணத்தின் ஒரு பகுதியை ஆஸ்பத்திரியில் ஏழை நோயாளிகளின் சிகிச்சைக்கு கொடுத்ததாகவும், மீதி பணத்தை நடனபாரில் உள்ள அழகிகளுடன் உல்லாசமாக செலவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

Next Story