நில அளவையருக்கு நிபந்தனை ஜாமீன் - சேலம் கோர்ட்டு உத்தரவு


நில அளவையருக்கு நிபந்தனை ஜாமீன் - சேலம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 26 Sep 2018 11:19 PM GMT (Updated: 26 Sep 2018 11:19 PM GMT)

லஞ்ச வழக்கில் கைதான நில அளவையருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சேலம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சேலம்,

சேலம் மாவட்டம் வாழப்பாடி கணபதி நகரை சேர்ந்தவர் இந்திராணி. இவர் தனது நிலங்களை அளவீடு செய்து பட்டா வழங்க கோரி இ-சேவை மையத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்து இருந்தார். இந்த நிலத்திற்கு பட்டா வழங்குவதற்காக அவரிடம் இருந்து வாழப்பாடி நில அளவையர் சவுந்திரராஜன் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் ஜாமீன் கேட்டு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி சிவஞானம்(பொறுப்பு) முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சவுந்திரராஜனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story