ஓமலூர் அருகே தனியார் பஸ் சிறைபிடிப்பு - போலீசார் விசாரணை
ஓமலூர் அருகே தனியார் பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
ஓமலூர்,
சேலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி தனியார் பஸ் ஒன்று நேற்று காலையில் சென்றது. இந்த பஸ்சை, டிரைவர் பாக்கியராஜ் ஓட்டி சென்றார். கண்டக்டராக கோபி பணியில் இருந்தார்.
தீவட்டிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே பஸ் சென்ற போது, அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ ஒன்று முந்தியது. தொடர்ந்து பஸ் முந்தி செல்வதும், அந்த சரக்கு ஆட்டோ முந்தி செல்வதுமாக இருந்தது.
இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த தனியார் பஸ் டிரைவர் தொப்பூர் ஆஞ்சநேயர் கோவில் அருகே சரக்கு ஆட்டோவின் முன்பாக பஸ்சை குறுக்காக நிறுத்தினார். இதையடுத்து அந்த சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த தீவட்டிப்பட்டி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த மாதேஷ் (வயது 23) பஸ்சில் ஏறி டிரைவர், கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது தங்களுக்கு பஸ் நிலையங்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல வேண்டியது இருக்கும் நிலையில், இவ்வாறு பஸ்சை முந்தியும், பிந்தியும் செல்வதுமாக இருந்தால் விபத்து ஏற்பட்டு விடும் என்று டிரைவரும், கண்டக்டரும் மாதேசிடம் சத்தம் போட்டனர்.
இதில் தகராறு ஏற்பட்டதால், மாதேஷ் பஸ்சில் இருந்து இறங்குவதற்கு முன்பு, அந்த பஸ்சை தொப்பூர் சோதனைச்சாவடி வரை வேகமாக ஓட்டிச்சென்று அங்கு சரக்கு ஆட்டோ டிரைவர் மாதேசை அவர்கள் இறக்கி விட்டனர். பின்னர் அங்கிருந்து அந்த தனியார் பஸ் தர்மபுரிக்கு சென்றது.
இதனிடையே தனக்கு நடந்த சம்பவம் குறித்து மாதேஷ் தனது தந்தை சேட்டு மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அவர் வேறு ஒரு வண்டியில் சம்பவ இடத்திற்கு வந்து தன்னுடைய வாகனத்தை திரும்ப எடுத்துக்கொண்டு தீவட்டிப்பட்டிக்கு வந்தார். பின்னர் அவர், அவருடைய உறவினர்கள் 20-க்கும் மேற்பட்டோருடன் தீவட்டிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே காத்திருந்தார்.
அதே நேரத்தில் தர்மபுரிக்கு சென்று விட்டு மீண்டும் சேலம் நோக்கி அந்த தனியார் பஸ் வந்தது. அப்போது அந்த பஸ்சை சிறைபிடித்து மாதேஷ் தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும், தீவட்டிப்பட்டி போலீசார் அங்கு விரைந்து வந்து மாதேஷ் தரப்பினரையும், தனியார் பஸ், கண்டக்ரையும் அழைத்து விசாரித்தனர். பின்னர் இருதரப்பினரிடமும் சம்பவம் குறித்து புகார் அளிக்குமாறு கூறிய போலீசார், அந்த பஸ்சை அங்கிருந்து எடுத்து செல்ல அனுமதித்தனர். இதையடுத்து சுமார் அரை மணி நேரம் தாமதமாக அந்த பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
இந்த சம்பவம் குறித்து இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story