வறட்சி நிவாரணம் கேட்டு இன்று விழுப்புரத்தில் காய்ந்த கரும்புகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
வறட்சி நிவாரணம் கேட்டு இன்று விழுப்புரத்தில் காய்ந்த கரும்புகளுடன் விவசாயிகளின் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெரம்பலூர்,
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில குழு கூட்டம் நேற்று பெரம்பலூரில் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில துணை தலைவர் நல்லாக்கவுண்டர் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரவீந்திரன் சங்க அறிக்கையை சமர்ப்பித்து பேசினார். பெரம்பலூர் நேரு பொதுத்துறை சர்க்கரை ஆலையின் கவுர தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார். கரும்புக்கு மாநில அரசு பரிந்துரை விலை நிர்ணயித்து வழங்கி வந்த நடைமுறையை கைவிட்டு வருவாய் பங்கீட்டு முறைப்படி கரும்பு விலையை நிர்ணயம் செய்திடும் முறையை தமிழ்நாடு அரசு சட்டமாக நிறைவேற்றி உள்ளது. இந்த சட்டம் கரும்பு விவசாயிகளுக்கு பாதகமானது என்பதால், அந்த சட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாதன் குழுவின் பரிந்தரையை அடிப்படையாக கொண்டு மத்திய–மாநில அரசுகள் கரும்புக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள 24 தனியார் சர்க்கரை ஆலைகள் 2013–14–ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளாக மாநில அரசு அறிவித்த பரிந்துரை விலையை தரவில்லை. இதனால் ரூ. ஆயிரத்து 250 கோடி பாக்கி வைத்துள்ளனர். இதுதவிர 2017–18–ம் ஆண்டு பருவ கரும்புக்கு மத்திய அரசு அறிவித்த விலையும் தராமல் 10 தனியார் சர்க்கரை ஆலைகள் சுமார் 150 கோடி வரை பாக்கி வைத்துள்ளனர். அந்த தனியார் சர்க்கரை ஆலைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து ரூ. ஆயிரத்து 400 கோடி கரும்பு பண பாக்கியை மாநில அரசு பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தொடர் பேராட்டங்களில் கரும்பு விவசாயிகள சங்கத்தினர் ஈடுபடுவார்கள்.
கூட்டுறவு–பொதுத்துறை சர்க்கரை ஆலை சுமார் ரூ.220 கோடி மாநில அரசு பரிந்துரை விலையை பாக்கி வைத்துள்ளது, அதனை பெற்று தர மாநில அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும். போதிய மழை இல்லாததால் கிணறுகளிலும், ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் இல்லாமல் வறண்டு விட்டது. இதனால் பெரம்பலூர், விழுப்புரம், மதுரை, சிவகங்கை உள்பட பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்த கரும்புகள் காயந்து விட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் கரும்புகள் காய்ந்து விட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் கரும்பு காய்ந்து விட்டது. காய்ந்து கருகி போன கரும்புக்கு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிட வேண்டும். கரும்பு பயிர் கடனை கருகிப்போன விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்திட வேண்டும்.
வறட்சி நிவாரணம் கேட்டு இன்று (வெள்ளிக்கிழமை) விழுப்புரத்தில் காய்ந்த கரும்புகளோடு விவசாயிகளின் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. தனியார் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளின் மாநில சிறப்பு மாநாடு நெல்லிக்குப்பத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 27–ந்தேதியும், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகளின் கரும்பு விவசாயிகளின் மாநில சிறப்பு மாநாடு வந்தவாசியில் நவம்பர் 16–ந்தேதியும் நடைபெறவுள்ளது. சர்க்கரை உற்பத்தி வீழ்ச்சி அடைந்ததற்கு மாநில அரசே பொறுப்பேற்க வேண்டும். கரும்புக்கான பணத்தை உடனுக்குடன் தராமல் விவசாயிகளை அலைக்கழிக்கப்பட்டதே சர்க்கரை உற்பத்தி வீழ்ச்சிக்கு காரணம். கரும்பு பண பாக்கியை முழுவதையும் விவசாயிகளுக்கு பெற்று தர மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் சங்கத்தின் மாநில பொருளாளர் சின்னப்பா, மாநில நிர்வாகிகள் ஜோதிராம், பழனிசாமி, சக்திவேல், கோபிநாத், ரவிச்சந்திரன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story