பட்டுப்புழு வளர்ப்புக்கு ரூ.2,169 கோடி ஒதுக்கீடு மத்திய பட்டுவாரிய தலைவர் பேச்சு
பட்டுப்புழு வளர்ப்புக்கு ரூ.2,169 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மத்திய பட்டுவாரிய தலைவர் ஹனுமந்தராயப்பா கூறினார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மேலவஸ்தாசாவடியில் உள்ள பட்டுப்புழு தொழில்நுட்ப சேவை மையத்தில் பட்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மத்திய பட்டுவாரிய தலைவர் ஹனுமந்தராயப்பா தலைமை தாங்கினார். திருச்சி மண்டல பட்டு வளர்ச்சித்துறை துணை இயக்குனர் மல்லிகா முன்னிலை வகித்தார். பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சந்திரசேகரன் வரவேற்றார்.
இதில் பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி நிலைய மண்டல தலைவர் ராஜகுமார், ஆராய்ச்சி விரிவாக்க மைய விஞ்ஞானிகள் ராஜாராம், சிவசுப்பிரமணியன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் மத்திய பட்டுவாரிய தலைவர் ஹனுமந்தராயப்பா பேசியதாவது:-
பட்டு வளர்ப்பு தொழில் செய்வது நன்றாக இருக்கும். அதிக லாபமும் கிடைக்கும். நம் நாட்டில் பட்டு வளர்ப்பு தொழில் நன்றாக இருக்கிறது. ஆனால் நெசவாளர்கள், நெசவு செய்ய தேவையான அளவுக்கு பட்டுநூல் உற்பத்தி இல்லை. இதனால் தான் சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து பட்டுநூல் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது.
இது பிரதமர் நரேந்திரமோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து இறக்குமதி செய்வதை தவிர்க்கும் வகையில் நாட்டில் பட்டுநூல் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் பட்டுப்புழு வளர்ப்பை அதிகப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். இதற்காக கடந்த ஆண்டு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டது. ஆனால் இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.2,169 கோடியை பிரதமர் நரேந்திரமோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார். முடிவில் தொழில்நுட்ப சேவை மைய அருள்சுரேஷ் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story