விளாத்திகுளம் அருகே ஓடையில் இறந்து கிடந்த புள்ளிமான்


விளாத்திகுளம் அருகே ஓடையில் இறந்து கிடந்த புள்ளிமான்
x
தினத்தந்தி 28 Sept 2018 3:15 AM IST (Updated: 28 Sept 2018 1:02 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் அருகே ஓடையில் புள்ளிமான் இறந்து கிடந்தது.

விளாத்திகுளம்,

விளாத்திகுளம் அருகே ஓடையில் புள்ளிமான் இறந்து கிடந்தது.

ஓடையில் இறந்து கிடந்த புள்ளிமான்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள கண்மாய்களில் நூற்றுக்கணக்கான புள்ளிமான்கள் வசித்து வருகின்றன. விளாத்திகுளம் அருகே குளத்தூரை அடுத்த கோட்டை மேடு கிராமத்தில் உள்ள ஓடையில் நேற்று காலையில் 4 வயதான ஆண் புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்தது.

அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விளாத்திகுளம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

காரணம் என்ன?

உடனே வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த புள்ளிமானின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் கால்நடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே புள்ளிமான் உடல் நலக்குறைவால் இறந்ததா?, ஓடையை தாண்டும்போது தவறி விழுந்து இறந்ததா?, பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட பயிர்களை தின்றதால் இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தெரிய வரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story