துப்பட்டாவால் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் வாலிபர் பிணம்
ஜெயங்கொண்டம் அருகே துப்பட்டாவால் தூக்குப்போட்டு வாலிபர் பிணமாக தொங்கினார். அவர் சாவில் மர்மம் இருப்பதாக உற வினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் கிராமம் மாங்கொட்டை தெருவை சேர்ந்தவர் சிவசாமி. இவரது மகன் முத்து என்கிற மாயகிருஷ்ணன் (வயது 30). இவர் கேரளாவில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் காலை அவர் கேரளாவிலிருந்து சொந்த ஊரான கல்லாத்தூருக்கு வந்திருந்தார். இந்நிலையில் அன்று இரவே ஜெயங்கொண்டம் அருகில் உள்ள மலங்கன்குடியிருப்பு பகுதியில், அரசுக்கு சொந்தமான ஆர்.எஸ்.பதி தோப்பில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் மாயகிருஷ்ணன் இறந்து கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாயகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாய கிருஷ்ணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரும் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு சென்றனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந் நிலையில் கல்லாத்தூர் கிராமத்திலிருந்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு மாயகிருஷ்ணனின் உறவினர்கள் வந்தனர். பின்னர் மாயகிருஷ்ணன் உடலை வாங்க மறுத்து, அவர் சாவில் மர்மம் இருப்பதாக கூறி ஜெயங்கொண்டம்-கும்ப கோணம் சாலையில் அரசு மருத்துவமனை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாயகிருஷ்ணன் உறவினர்கள் கூறியதாவது:-
அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும், மாய கிருஷ்ணனுக்கும் தொடர்பு இருந்தது. கேரளாவிலிருந்த மாயகிருஷ்ணனை அந்த பெண் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வர சொல்லி உள்ளார். பின்னர் அவர் ஊருக்கு வந்தவுடன் ஆர்.எஸ்.பதி தோப்புக்கு அவரை அழைத்து சென்றுள்ளார். பின்னர் மாயகிருஷ்ணன் இறந்து விட்டதாக அந்த பெண் ஊரில் உள்ளவர்களுக்கு தெரிவித்துள்ளார். மேலும் அந்த பெண் உள்பட சிலருக்கும், மாயகிருஷ்ணனின் மர்ம சாவுக்கும் தொடர்பு உள்ளது. எனவே அவர்களை கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அப்போது போலீசார் தற்போது விசாரணை செய்து வருகின்றோம். மேலும் பிரேத பரிசோதனையின் அறிக்கை முடிவு வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் மாயகிருஷ்ணனின் உடலை உறவினர்கள் அவரது சொந்த ஊருக்கு எடுத்து சென்றனர். இதனால் ஜெயங்கொண்டம்-கும்பகோணம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story